தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 40 டிஎம்சி காவிரி நீரை வழங்க வேண்டும் ; கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தல்

0 1689
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 40 டிஎம்சி காவிரி நீரை வழங்க வேண்டும்

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 40 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தியுள்ளது.

காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழுவின் 53வது ஆலோசனை கூட்டம் புதுடெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழகம் சார்பில் கலந்துகொண்ட பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தற்போது வரை நிலுவையிலுள்ள 25.84 டி.எம்.சி நீரையும் இம்மாதத்தற்கான 14 டி.எம்.சி நீரையும் வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

அதனடிப்படையில் கர்நாடக அரசு மொத்தமாக 40 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தியது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments