திருப்பதி பிரம்மோற்சவத்தின் 5-ம் நாள் விழா ; கருட சேவையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்பு

0 2318
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 5-ம் நாள் விழா ; கருட சேவையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்பு

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான இன்று தங்க கருட வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார். முன்னதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கோயில் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து சென்று ஏழுமலையானுக்கு சமர்பித்தார்.

கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில், தங்கம், வைரம் மற்றும் பச்சை மரகதக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார். கருட சேவையில் பங்கேற்ற ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, 2022-ம் ஆண்டிற்கான திருமலை திருப்பதி தேவஸ்தான கேலண்டர்கள் மற்றும் டைரிகளை வெளியிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments