சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளை 3 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்

0 6067
சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளை 3 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்

சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை 3 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் உணவு விடுதியில் பணிபுரியும் 2 வட மாநில இளைஞர்கள் நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

பச்சையப்பன் கல்லூரி அருகே அவர்களை வழிமறித்த 4 பேர் கும்பல் கத்தி மற்றும் கையில் இருந்த பீர் பாட்டில்களை உடைத்து தாக்கிவிட்டு, அவர்களது செல்போன்களை பறித்துச் சென்றனர். அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவனை பின்னால் வந்த மற்றொரு ஹோட்டல் ஊழியர் துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

அவன் அளித்த தகவலின் பேரில் இதில் தொடர்புடைய மற்ற மூவரை 3 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். 2 வட மாநில இளைஞர்களும் முகத்தில் வெட்டுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments