500 பணத்தை எடுத்ததாகக் கூறி மனைவியை வெட்டிக் கொன்ற முதியவர்

0 3266

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே 500 ரூபாய் பணத்தை எடுத்ததாகக் கூறி மனைவியை கொடூரமாக வெட்டிக் கொன்ற 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த சுடலை - முத்தம்மாள் தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக ஒரே காம்ப்பவுண்டில் தனித்தனி வீடுகளில் வசித்து வந்தனர்.

காலை முத்தம்மாள் வீட்டுக்கு வந்த சுடலை, தனது 500 ரூபாய் பணத்தை எடுத்ததாகக் கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கையோடு கொண்டு வந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் இரத்தவெள்ளத்தில் முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் சுடலையை கைது செய்து அழைத்துச் செல்ல முற்பட்டபோது, அங்கிருந்த உறவினர்கள் ஆத்திரத்தில் அவரைத் தாக்க முற்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments