ரூ.10,000 முதலீடு செய்தால் பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தைக் கூறி 20,000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றிய மோசடி கும்பல்

0 14702

சென்னையில், multi level marketing மூலம் பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு விடுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சோதனை நடத்தி விசாரித்ததில், திருப்பூர், கோவை மாவட்டத்தை சேர்ந்த 5 பேர், ஜெர்மனி வங்கியில் இரிடியம் வைத்திருப்பதாகவும், அதில் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் கோடிக் கணக்கில் பணம் திருப்பி வரும் எனக்கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

2009 ஆம் ஆண்டு முதல் சொகுசு விடுதிகளில் மீட்டிங் நடத்தி ஆசை வார்த்தை கூறி 20,000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியுள்ளதும் விசாரணையில் அம்பலமானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments