போதிய அளவுக்கு நிலக்கரி சப்ளை இல்லாததால், அமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை

0 2818

போதிய அளவுக்கு நிலக்கரி சப்ளை இல்லாததால், நாட்டின் பல பகுதிகளில் மின்தட்டுப்பாடு ஏற்படலாம் என செய்திகள் வெளியாகும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிலக்கரி மற்றும் எரிசக்தி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அனல் மின் நிலையங்களுக்கு 4 நாட்களுக்கு தேவையான 72 லட்சம் டன் நிலக்கரி இருப்பு உள்ளதாகவும், கோல் இந்தியா நிறுவனத்திடம் உள்ள 4 கோடி டன் நிலக்கரிஅனல் மின் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும் நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments