தொடர் கனமழை எதிரொலி ; 3000 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

0 1638
அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையில் சிக்கி, அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 360 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. கடந்த செப்டம்பர் மாத முதல் வாரம் முதல் அறுவடை பணிகள் துவங்கி நடைப்பெற்று வரும் நிலையில், கடந்த 2 வாரங்களாகவே, மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்க, வயலிலேயே மூழ்கி அழுகி வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments