பொருளாதாரத்திற்கு நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது

இந்தாண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த டேவிட் கார்ட் , ஜோஷ்வா டி.ஆங்றிஸ்ட் மற்றும் கய்டோ டபுள்யு இம்பென்ஸ், ஆகியோர் நோபல் பரிசுக்கு தேர்வானதாக ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.
குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட தொழிலாளர்கள் தொடர்பான பகுப்பாய்விற்காக டேவிட் கார்டுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்தது.
மேலும் பொருளாதாரத்தில் உள்ள காரண உறவுகள் பற்றி மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்விற்காக ஜோஷ்வா டி.ஆங்றிஸ்ட், கய்டோ டபுள்யு இம்பென்ஸ் நோபல் பரிசிற்கு தேர்வாகினர்.
Comments