பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

0 3812
பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

பிரபல மலையாள திரைப்பட நடிகரும், சில தமிழ் படங்களில் நடித்தவருமான நடிகர் நெடுமுடி வேணு காலமானார். அவருக்கு வயது 73.

உடல்நலக் குறைவு காரணமாக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். 500 க்கும் மேற்பட்ட மலையாள படங்களில், முக்கிய கதாபாத்திரமாகவும், சில படங்களில் கதையின் நாயகனாகவும், காமெடி ரோல்களிலும் அவர் நடித்துள்ளார்.

தமிழில் இந்தியன், இந்தியன் 2, அன்னியன், சர்வம் தாளமயம், சிலம்பாட்டம், உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் அவர் நடித்தார். கேரள அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த டிவி சீரியல் நடிகர் என பல விருதுகளை பெற்றுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments