புதுச்சேரியில் மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து தி.மு.க.- காங்., முழு அடைப்பு போராட்டம்..!

0 1955

புதுச்சேரியில், மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் முக்கிய பகுதிகள் வெறிச்சோடின. 

வார்டு வரையறையில் குளறுபடிகளை சரி செய்யாமல் உள்ளாட்சி தேர்தல்  அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறி திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.

தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படாததால் பயணிகள் தகுந்த நேரத்திற்கு அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments