அரசு பேருந்து, வேன் மற்றும் கண்டெய்னர் லாரி ஒன்றோடு ஒன்று மோதி விபத்து..!

0 2018

திருச்சி அருகே அரசு பேருந்து, வேன் மற்றும் கண்டெய்னர் லாரி என மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் 22 பேர் காயம் அடைந்தனர்.

எடமலைப்பட்டி புதூரில் இருந்து கரூர் நோக்கி சென்ற டூரிஸ்ட் வேனை முக்கொம்பு அருகே கண்டெய்னர் லாரி  முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து லாரி ஏறி வருவது தெரிந்தும் ஓரம் கொடுக்காமல் நேருக்கு நேர் வந்ததால் பேருந்தும், கண்டெய்னரி லாரியும் மோதிக்கொண்டது.

இதனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து இடதுபக்கமாக திரும்பியதால் பின்னால் வந்து கொண்டிருந்த வேன் லாரியின் பக்கவாட்டில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 22 பேர் காயம் அடைந்த நிலையில், 3 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments