காஷ்மீர் என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

0 1970

காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் நடக்கும் என்கவுன்டரில் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆம் தேதியில் இருந்து காஷ்மீரில் அப்பாவி மக்கள் 7 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இதை அடுத்து தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. அனந்தனாக் மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு தீவிரவாதி கொல்லப்பட்ட நிலையில், இன்று காலை பந்திப்போரா மாவட்டத்தில் துவங்கிய தேடுதல் வேட்டையில், லஷ்கரே தொய்பா தீவிரவாதி இம்தியாஸ் அகமது தார் என்பவன் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக காஷ்மீர் போலீஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. 

மேலும் பல தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலை தொடர்ந்து பந்திப்போரா மாவட்டத்தின் குண்ட்ஜஹாங்கீர் என்ற இடத்தில் என்கவுன்டர் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments