தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது..!

0 1572

வேலூர் மாவட்டத்தில், தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீசார் துரத்திப் பிடித்து கைது செய்தனர்.

பொன்னை மற்றும் மேல்பாடி பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக ஒரே பைக்கில் வந்த 3 பேர், போலீசாரை கண்டு நிற்காமல் வேகமாக வாகனத்தை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.

அவர்களை துரத்தி சென்று பிடித்த போலீசார் விசாரணை நடத்தியதில், மூவரும் சுற்று வட்டாரங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 20 சவரன் நகை, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments