கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை இரண்டு மடங்கு உயர்வு..!

0 2006

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. வெளிமாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் 25 ரூபாய்க்கு விற்பனையான கத்தரிக்காய்  45 ரூபாய்க்கும் ,  கேரட் 40ல் இருந்து 50  ரூபாய்க்கும், பீன்ஸ் 40-ல் இருந்து 50 ரூபாய்க்கும், அவரைக்காய் 25 இருந்து 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 25-ல் இருந்து 40 ரூபாய்க்கும், முள்ளங்கி 15-ல் இருந்து 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments