காங்கோ ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்..!

0 1658

காங்கோ ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 51 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடந்து வருகிறது. மங்களா மாகாணத்தில் பாயும் காங்கோ ஆற்றில் சென்ற ஒன்றிணைக்கப்பட்ட 9 படகுகள் மோசமான வானிலை மற்றும் கூட்ட நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

30 பேர் மீட்கப்பட்டு உள்ளதாகவும் பெண்கள், குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை விபத்து ஏற்பட்ட நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு அங்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments