இந்திய விண்வெளி சங்கத்தினை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்..!

0 1378

இந்திய விண்வெளி சங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்த முக்கிய நிகழ்வில் விண்வெளி துறை பிரதிநிதிகளுடன் பிரதமர் உரையாடுகிறார். ஐஎஸ்பிஏ என்பது விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் நிறுவனங்களின் முதன்மையான தொழில்துறை சங்கம் ஆகும்.

இந்தியாவை தற்சார்பு மிக்க, தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்த மற்றும் விண்வெளி அரங்கில் முன்னணி இருப்பதற்கு இந்த அமைப்பு உதவுகிறது. விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களில் மேம்பட்ட திறன்களைக் கொண்ட முன்னணி உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிறுவனங்களை ஐஎஸ்பிஏ பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments