ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தொடர்புடையதாக சந்தேகித்து 700க்கும் மேற்பட்டோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்..!

0 1302

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 700க்கும் மேற்பட்டோரை போலீசார் பிடித்து வைத்து விசாரித்து வருகின்றனர். அண்மையில் அடுத்தடுத்து 7 அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரே வாரத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். பண்டிட்,சீக்கியர் மற்றும் இந்துக்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தியவர்கள் உள்ளூர் நபர்கள் தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீநகர், புல்காம், பாரமுல்லா உள்ளிட்ட 7 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கடந்த 5 ஆம் தேதி கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி முகமது ஷஃபி அளித்த தகவலின் அடிப்படையில் மேலும் 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் முழுவீச்சில் தீவிரவாதத் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இது வரை 700க்கும் மேற்பட்ட உள்ளூர் இளைஞர்களை சுற்றி வளைத்து சிறைப்பிடித்துள்ள போலீசார், பாகிஸ்தானில் இருந்து உள்ளூர் இளைஞர்களுக்கு வலைவிரிக்கும் தீவிரவாதிகளுடன் அவர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த வியாழக்கிழமை உள்துறைஅமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தையடுத்து பாதுகாப்பு படையினர், தேசியப் புலனாய்வு அமைப்பினர், காவல்துறையினர் காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments