ராஜஸ்தானில் இளைஞரை கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

0 1614
ராஜஸ்தானில் இளைஞரை கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

ராஜஸ்தானின் ஹனுமன்கர்ஹ் மாவட்டத்தில் இளைஞர் ஒருவரை அடித்தே கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டான். பிரேமபுரா கிராமத்தைச் சேர்ந்த Jagdish என்பவரை 5 பேர் கட்டையால் கண்மூடித்தனமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

போலீஸ் விசாரணையில், Jagdish-க்கு அதே கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவரின் மனைவியுடன் தொடர்பு இருந்ததும், அதனை கண்டித்து வந்த முகேஷ் வியாழக்கிழமை Jagdish-ஐ தன் உறவினர்கள் உதவியுடன் கடத்தி சரமாரியாகத் தாக்கி விட்டு பின்னர் Jagdish-ன் வீட்டருகே உடலை வீசிச் சென்றதும் தெரியவந்தது.

முகேஷ், அவரது மனைவி, உறவினர்கள் என 11 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. முகேஷை கைது செய்த போலீசார் இதில் சம்பந்தப்பட்ட மேலும் 4 பேரை சுற்றி வளைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments