வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடிச்சென்ற இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு

0 1840
வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடிச்சென்ற இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆற்காடு, ஆசாத் தெருவில் வசித்து வருபவர் விஜயன். ஓட்டல் ஊழியரான இவர், வேலை முடித்துவிட்டு இரவில் வீடு திரும்பியவர் தன்னுடைய பைக்கை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.

மறுநாள் எழுந்து வந்து பார்த்த போது வாசலில் இருந்த பைக் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியாகியுள்ளார். வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியை பார்வையிட்ட போது இரு சக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து விஜயன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments