கிழக்கு ஆப்கானிஸ்தானில் 8 தீவிரவாதிகளை தாலிபான்கள் கைது செய்துள்ளதாக தகவல்

0 2854
கிழக்கு ஆப்கானிஸ்தானில் 8 தீவிரவாதிகளை தாலிபான்கள் கைது செய்துள்ளதாக தகவல்

கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 8 தீவிரவாதிகளை தாலிபான்கள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாகாணாத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுருந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும், கைது செய்யப்பட்ட அவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், மாகாண கலாச்சார மற்றும் தகவல் இயக்ககத்தின் தலைவர் ஷபீர் அஹமத் உஸ்மானி தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக காபுல் மற்றும் ஜலாலாபாத் நகரங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திவரும் சூழலில் இந்த கைது நடைபெற்றுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments