சொகுசு கப்பலில் போதைப் பொருள் சிக்கிய விவகாரம் ; மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

0 1848
சொகுசு கப்பலில் போதைப் பொருள் சிக்கிய விவகாரம் ; மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

மும்பை அருகே சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில் மேலும் ஒரு வெளிநாட்டவர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைதாகி சிறையில் உள்ளனர்.

இந்நிலையில், மும்பை, கொரேகான் உள்ளிட்ட பகுதிகளில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒகரோ ஒவ்சாமா  என்பவரை கைது செய்து, கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

வழக்கில் ஏற்கனவே வெளிநாட்டினர் ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சர்வதேச தொடர்புகள் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments