குஜராத்தில், குழந்தைகள் கடத்தும் பெண் என்று நினைத்து பெண்ணை தாக்கிய பொது மக்கள்

0 1721

குஜராத்தில் குழந்தைகளை கடத்திச் செல்லும் பெண் என்ற சந்தேகத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் பொதுமக்களால் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

வல்சாத் மாவட்டத்தின் பரியா கிராமத்துக்கு தன் மகனுடன் மோட்டர் பைக்கில் சென்ற பிலிமோரா நகரத்தை சேர்ந்த பெண் , வீடுவீடாகச் சென்று நவராத்திரி பூஜைக்காக யாசகம் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, அவர் குழந்தைகளை திருடுபவர் என நினைத்த அப்பகுதி மக்கள், அப்பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்தும், காலணிகளால் அடித்தும் தாக்கினர். சம்பவத்தின் காட்சிகள் வெளியான நிலையில், பெண்ணை தாக்கியவர்கள் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments