ஞாயிற்று கிழமையும் திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்

0 1394

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விடுமுறை தினமான ஞாயிற்று கிழமையும் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

மழைக்காலம் நெருங்கி வருவதால் நெல்மணிகள் மழைநீரில் நனையாமல் இருக்கும் வகையில் விவசாயிகள் நலன் கருதி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் நெல்கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி தஞ்சை மாவட்டம் முழுவதுமுள்ள 245 நெல் கொள்முதல் நிலையங்களிலும், நாகப்பட்டினம்  மாவட்டத்திலுள்ள 75 நெல் கொள்முதல் நிலையங்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 305 நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஞாயிற்று கிழமையிலும் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments