தமிழகத்தின் 9 மாவட்டங்களில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு ,2 வார்டுகளில் திங்கட்கிழமை மறுவாக்குபதிவு என அறிவிப்பு

0 1813

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் 78.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் 12ஆம் தேதி  வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், 2 வார்டுகளில் திங்கட்கிழமை மறுவாக்குபதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூந்தண்டலம் கிராம ஊராட்சியில், வார்டு 12-க்கான உறுப்பினர் தேர்தலில் வாக்கு சீட்டு தவறாக அச்சடிக்கப்பட்டதன் காரணமாகவும், செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலப்பாக்கம் கிராம ஊராட்சியில்  2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 1வது வார்டு வாக்காளர்களும் வாக்களித்ததன் காரணமாகவும் மறுவாக்கு பதிவு நடைபெறவுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments