ஷான்ஜி மாகாணத்தில் கன மழையால் வெள்ளம்... 1.9 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள் வெள்ளதில் மூழ்கின..!

0 1322

வடக்கு சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

வெள்ளத்தால் 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 ஆயிரம் கூடாரங்கள் மற்றும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான படுக்கைகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments