தருமபுரி அருகே கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதி தீப்பற்றி எரிந்த லாரி, 30 டன் அரிசி மூட்டைகள் தீயில் கருகி சேதம்

0 1655

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில் 30 டன் அரிசி மூட்டைகள் தீயில் கருகி நாசமாகின.

ஒரிசாவில் இருந்து அரிசி லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று தருமபுரி மாவட்டம் வழியாக கேரளா சென்று கொண்டிருந்தது. தமிழக பதிவெண் கொண்ட அந்த லாரியில் இரண்டு ஓட்டுநர்கள் இருந்துள்ளனர்.

தொப்பூர் கணவாய் அருகே வேகமாக வந்ததாகக் கூறப்படும் லாரி, அதிக பாரம் காரணமாக சாலை இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதி, எதிர்புற சாலையில் சென்று கவிழ்ந்துள்ளது.

சாலையில் லாரியின் பாகங்கள் உரசியதில் தீப்பற்றியதில், அரிசி மூட்டைகளுக்கு தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. ஓட்டுநர்கள் இருவரும் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments