பைக்கில் மனைவி, பேரனுடன் சென்ற நபர்... பின்னால் லாரி வருவதை அறியாமல் சாலையைக் கடக்க முயன்றதால் விபரீதம்..!

0 5186

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், லாரி திரும்பும் திசையை கவனிக்காமல் சாலையைக் கடக்க முயன்ற பைக் மீது லாரி மோதிய பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பூதனூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன், தனது மனைவி, பேரன் ஆகியோரை ஏற்றிக் கொண்டு மகள் மல்லிகாவை பார்ப்பதற்காக டி.வி.எஸ். எக்ஸ்-எல்-லில் சென்று கொண்டிருந்தார்.

போச்சம்பள்ளி நான்கு முனை சந்திப்பில் வந்த அவர், பின்னால் லாரி வருவதையும், லாரி இடதுபுறமாக திரும்புவதற்கு இண்டிகேட்டர் போட்டிருந்ததையும் பார்க்காமல் அலட்சியமாக சாலையை நேராக கடக்க முயன்றார். அப்போது, லாரி இடதுபுறமாக திரும்பிய நிலையில், பைக் மீது லாரி மோதி மூவரும் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டனர்.

பலத்த காயமடைந்த முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது மனைவியும், பேரனும் காயங்களுடன் உயிர் தப்பினர். பைக்கில் சைடு மிரர் இல்லாத நிலையில், லாரி திரும்புவதை பார்க்காமல் கவனக்குறைவால் வந்ததால் விபத்து நிகழ்ந்திருக்கிறது எனவும், லாரி பெரிய வாகனம் என்பதால் வளைவுப் பகுதிகளில் லாரிக்கு அருகாமையில் இடதுபுறமாக சென்றால் அது ஓட்டுநருக்கு தெரிவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என, போலீசார் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments