குன்னூர், மேட்டுப்பாளையம் மலை ரயில் போக்குவரத்து மீண்டும் ரத்து

0 1268

ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டது.

மேட்டுபாளையத்தை அடுத்த கல்லார் ரயில் நிலையத்தை கடந்து குன்னூர் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த போது, ரயிலின் முன் பெட்டியில் அமர்ந்திருந்த பிரேக் மேன், மரம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு ரயில் பாதை முழுவதுமாக மூடி இருந்ததை பார்த்து உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

இதனால் சுற்றுலா பயணிகளுடன் சென்ற ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே  திரும்பியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments