இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது, பேருந்து மோதிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

0 3136

புதுச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது வேகமாக வந்த தனியார் பேருந்து மோதிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கொம்பாக்கம் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் ராஜு, மனவெளியில் இருந்து கொம்பாக்கம் பகுதிக்கு செல்வதற்காக வில்லியனூர் மேம்பாலம் அருகே, பேருந்து வருவதை கவனிக்காமல் திரும்பி உள்ளார்.

அப்போது மேம்பாலத்தில் இருந்து வேகமாக இறங்கி வந்த பேருந்து முதியவர் மீது மோதி சிறிது தூரம் தர தரவென இழுத்துச் சென்றது.

தலைக்கவசம் அணியாமல் சென்ற முதியவரின் தலையில் பலமாக அடி பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments