மீண்டும் ஒரு மின்வெட்டு காலகட்டம் ஏற்பட்டால் தமிழகம் தாங்காது - கமல்

0 1945

மீண்டும் ஒரு மின்வெட்டு காலகட்டம் ஏற்பட்டால் தமிழகம் நிச்சயம் தாங்காது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களில் 14 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு வைக்கப்படும் நிலையில், தற்போது 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பில் உள்ளதாக செய்திகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

மருத்துவமனைகளுக்கும், விவசாயிகளுக்கும் தடையற்ற மின்சாரம் அத்தியாவசியம் என்பதால் தமிழக அரசு, தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் கேட்டு பெற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments