பச்சையப்பா சில்க்ஸ், எஸ்.கே.பி. நிறுவனத்தில் நடந்த ஐ.டி.ரெய்டு.! கணக்கில் வராத ரூ.650 கோடி வருவாய் கண்டுபிடிப்பு

0 2870

காஞ்சிபுரம் பச்சையப்பா சில்க்ஸ் நிறுவனம் மற்றும் எஸ்.கே.பி. நிதி நிறுவனத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்ட ஐ.டி. ரெய்டில், கணக்கில் வராத 650 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பச்சையப்பா சில்க்ஸ் நிறுவனம், கடந்த நான்கு வருடங்களாக விற்பனையை குறைத்து காட்டி, பிரத்யேக மென்பொருள் பயன்படுத்தி போலி பில் போட்டு மோசடி செய்ததோடு 100 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக, கணக்கில் வராத வருமானத்தை கொண்டு பல்வேறு முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் வாங்கி இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பச்சையப்பா சில்க்ஸ் நிறுவனத்தில் இருந்து 44 லட்ச ரூபாய் ரொக்கமும், 9.5 கிலோ தங்க நகைளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, எஸ்.கே.பி நிதி நிறுவனம் சட்டவிரோதமாக இயங்கி வந்ததும், அந்நிறுவனத்தின் முதலீடுகள் மற்றும் பரிவர்த்தனைகள் அனைத்தும் ரொக்கமாக 400 கோடி ரூபாய் அளவிற்கு பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளதும், 150 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எஸ்.கே.பி நிறுவனத்தில் 1.35 கோடி ரூபாய் ரொக்கமும், 7.5 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments