விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா கைது

0 1815

உத்தரபிரதேசம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள, மத்திய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நிகழ்ந்த போது, அப்பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் நடந்த மல்யுத்தப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்ததாக போலீசாரிடம் ஆசிஷ் மிஸ்ரா தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

செல்போன் சிக்னலை ஆய்வு செய்து, சம்பவ இடத்திற்கு அருகே இருந்தது உறுதிசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபோல், முன்னுக்குபின் முரணாக தகவல்களை போலீசாரிடம் ஆஷிஷ் மிஸ்ரா தெரிவித்ததே கைதுக்கு காரணமாக கூறப்படுகிறது.

மேலும் ஆஷிஷ் மிஸ்ராவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments