தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை

0 7054

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்
என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments