திமுக ஆட்சியில் தமிழகத்தில் தொழில்துறை புத்துணர்வு பெற்றுள்ளது - முதலமைச்சர்

0 2044
திமுக ஆட்சியில் தமிழகத்தில் தொழில்துறை புத்துணர்வு பெற்றுள்ளதாகவும், இந்தியாவிலேயே முதலாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக தமிழககத்தை மாற்றுவதே இலக்கு எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் தமிழகத்தில் தொழில்துறை புத்துணர்வு பெற்றுள்ளதாகவும், இந்தியாவிலேயே முதலாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக தமிழககத்தை மாற்றுவதே இலக்கு எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் நடைபெற்ற ட்ரில்லியன் டாலர் தமிழ்நாடு கருத்தரங்கில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் மெர்ச்சன்ட்ஸ் ஆஃப் மெட்ராஸ் என்ற சிறப்பு தொகுப்பின் வணிக பிரதியை வெளியிட்டார். 

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தமிழகத்தின் பொருளாதாரம் உயர, தனிமனித வருமானம் உயர வேண்டும் எனவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக திட்டமிட்டு ஆட்சி நடத்துவதாகவும் கூறினார். அனைத்து வகையான தொழில்களை தொடங்குவதற்கு தமிழகம் சாதகமான சூழலை கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments