பல ஆயிரம் கோடி ரூபாய் போதைப் பொருள் பிடிபட்ட வழக்கு... கோவையைச் சேர்ந்தவர் வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை..!

0 1516

பல ஆயிரம் கோடி ரூபாய் போதைப் பொருள் பிடிபட்ட வழக்கில், கோவையை சேர்ந்தவர் வீட்டில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து குஜராத் துறைமுகத்துக்கு கடத்திவரப்பட்ட 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சென்னை கொளப்பாக்கத்தைச் சேர்ந்த தம்பதியும், கோவையை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மும்பையில் இருந்து கோவை வந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் குழு, பேரூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ராமசாமி நகர் பகுதியில் உள்ள ராஜ்குமாரின் தாயார் வீட்டில் சோதனை நடத்தினர். மேலும், அவர் தொடர்புடைய மற்ற இடங்களிலும் சோதனை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments