கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... நீரில் மூழ்கிய தரைப்பாலங்கள்..!

0 1908

ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி அணையில் இருந்து வரும் நீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நெடியம், சாமந்தவாடா தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால், அம்மப்பள்ளி அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் திருவள்ளூர் மாவட்ட எல்லையை வந்தடைந்த நிலையில், ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கும் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பாலத்தை கடக்கவோ, ஆற்றில் இறங்கவோ வேண்டாம் என கொசஸ்தலை ஆற்றங்கரையோரத்திலுள்ள சுமார் 20 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அடிக்கடி தரைப்பாலங்கள் நீரில் மூழ்குவதால் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments