ஜெர்மனியில் டெஸ்லாவின் மின்சார கார் தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்ட பொதுமக்கள்..

0 1829
ஜெர்மனியில் மின்சார கார் தயாரிக்கும் தொழிற்சாலையை டெஸ்லா நிறுவனம் நிறுவி உள்ள நிலையில், ஏராளமான பொதுமக்கள் தயாரிப்பு பணிகளை பார்வையிட்டனர்.

ஜெர்மனியில் மின்சார கார் தயாரிக்கும் தொழிற்சாலையை டெஸ்லா நிறுவனம் நிறுவி உள்ள நிலையில், ஏராளமான பொதுமக்கள் தயாரிப்பு பணிகளை பார்வையிட்டனர்.

பெர்லின் நகர் அருகே தயாரிப்பு ஆலை அமைத்த டெஸ்லா, உள்ளூர் மக்களை திருவிழா போல் ஒன்று திரட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது. 9,000 டிக்கெட்டுகள் விநியோகிப்பட்டு, தங்கள் நிறுவன கார் தயாரிப்பு பணிகளான கட்டமைத்தல், வர்ணம் பூசுதல், தர கட்டுப்பாட்டு பணிகளை டெஸ்லா எடுத்துரைத்தது.

ஆலைப் பகுதிகளை பார்வையிட்டு, டெஸ்லா கார்களிள் பயணித்த அனுபவம் குதூகலமாக இருந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். பிரம்மாண்டமாக அமைந்து உள்ள ஆலையில் கார்களை தயாரிக்க இன்னும் ஜெர்மன் அதிகாரிகள் முழுமையாக அனுமதி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments