விமானத்தில் நடுவானில் ரகளையில் ஈடுபட்ட பயணியை கைது செய்த போலீசார்...!

0 1549

அமெரிக்காவில், விமானத்தில் சென்ற பயணி ஒருவர் நடுவானில் ரகளையில் ஈடுபட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 78 பயணிகளுடன் இண்டியானாபொலிஸ்-ல் இருந்து நியூயார்க் புறப்பட்டு சென்ற எம்பிரேயர் விமானத்தில் இருந்த பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

உடனே அவசரமாக நியூயார்க்கின் லா கார்டியா  விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. ரகளையில் ஈடுபட்ட நபரை பிடித்து தரையில் தள்ளிய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ஏன் ரகளையில் ஈடுபட்டார் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments