நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது பலமாக மோதிய பைக்... தூக்கிவீசப்பட்ட வாகன ஓட்டி..!

0 3513
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே வளைவில் திரும்ப முயன்ற இருசக்கர வாகனம், அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்றிருந்த சரக்கு வாகனம் மோதிய பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே வளைவில் திரும்ப முயன்ற இருசக்கர வாகனம், அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்றிருந்த சரக்கு வாகனம் மோதிய பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அம்பலகடை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ஐயப்பன், அருமனையில் இருந்து வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

பைக்கில் வேகமாக சென்ற ஐயப்பன், வளைவில் திரும்ப முயன்ற போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அங்கு நின்றிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி தூக்கிவீசப்பட்டார்.

ஹெல்மெட் அணியாமல் இருந்த நிலையில், தூக்கிவீசப்பட்ட வேகத்தில், பலத்த காயமடைந்து ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டெம்போவுக்கு அருகில் நின்றிருந்தவரும் நூலிழையில் தப்பிய நிலையில், வளைவு பகுதியில் வாகனத்தை நிறுத்தக் கூடாது என போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments