தன் மீதான கொலை வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் - எம்.பி.ரமேஷ்..!

0 1813

எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை என தெரிவித்துள்ள கடலூர் எம்.பி. ரமேஷ், தன் மீதான கொலை வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என கூறியுள்ளார்.

எம்.பி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் கோவிந்தராஜ் என்ற தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில், எம்.பி. உட்பட 6 பேர் மீது கொலை, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், எம்.பி.யை தவிர மற்ற 5 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை எனவும், புகார்களை சட்ட ரீதியாக எதிகொள்ள தயாராக இருப்பதாகவும் ரமேஷ் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments