ஹோட்டலில் உணவு வாங்கிக் கொடுத்த போலீசார்... சாப்பிட்டுவிட்டு 2 கைதிகள் தப்பியோட்டம்..!

0 14553

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்து  செல்லும் வழியில் இரண்டு கைதிகள் தப்பியோடிய நிலையில், போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

கூமாப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், அருண்குமார் ஆகிய 2 பேரும் பட்டா கத்தியுடன் சுற்றித் திரிந்ததற்காக கைது செய்யப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிபதிகள் அவர்களை அருப்புக்கோட்டை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நிலையில், சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் காவல்துறையினர் இருவருக்கும் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கி கொடுத்துள்ளனர். அங்கிருந்து புறப்படும் போது இரண்டு கைதிகளும் தப்பியோடியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments