ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர்பதவிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு தொடங்கியது..!

0 1674

நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் மொத்தமாக 77 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் யு.பி.எஸ்.சி. தேர்வை எழுதுகின்றனர்.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

தேர்வர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்க அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தேர்வு வளாகத்திற்குள் செல்போன், டிஜிட்டல் கைக்கடிகாரம், உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments