சாலைத் திருப்பத்தில் அலட்சியமாகத் திருப்பப்பட்ட டிப்பர் லாரி... பின் சக்கரம் ஏறி மூதாட்டி பலி..!

0 2315

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் சாலை திருப்பத்தில் அலட்சியமாகத் திருப்பப்பட்ட டிப்பர் லாரி மோதி கீழே விழுந்த மூதாட்டி மீது லாரியின் சக்கரம் ஏறி அவர் சம்பவ இடத்திலேயே பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

குமாரவலசு பகுதியைச் சேர்ந்த மாத்தாள் என்ற அந்த மூதாட்டி, முதியோர் உதவித் தொகையை எடுப்பதற்காக மொடக்குறிச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குச் சென்றுள்ளார்.

4 வழிச் சாலையை மூதாட்டி கடக்க முயன்றபோது, முத்தூர் சாலையிலிருந்து பூந்துறை சாலையில் திரும்பிய டிப்பர் லாரி ஒன்று, மாத்தாள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாத்தாள் மீது, லாரியின் பின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பலியானார்.

மூதாட்டியை கவனிக்காமல் லாரியை அலட்சியமாகத் திருப்பிய லாரி ஓட்டுநர் யுவராஜ் தலைமறைவான நிலையில் அவனை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments