போலீஸ் எனக் கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்த போலி போலீஸ் கைது..

0 1575
மதுரை மாவட்டம் பெருங்குடியில் போலீஸ் எனக் கூறி பணம் வசூல் செய்தும், கடத்தல் மதுபானம், மற்றும் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் பெருங்குடியில் போலீஸ் எனக் கூறி பணம் வசூல் செய்தும், கடத்தல் மதுபானம், மற்றும் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

ஆஸ்டின்பட்டி சாலையில் போலீஸ் எனக் கூறி ஒருவர் வாகனங்களை மறித்து பணம் வசூல் செய்வதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது.

வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்திற்கு இடமாக போலீஸ் என இரு சக்கர வாகனத்தில் ஸ்டிக்கெர் ஒட்டி சுற்றிய திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கரந்தமலையை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து பணம் வசூலித்ததும், மதுபானம் மற்றும் கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்து, 60 மதுபாட்டில்கள், கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments