கிழக்கு மத்திய அரபிக்கடலில் சூறாவளி சுழற்சி.. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு

0 1321
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், கிழக்கு மத்திய அரபிக்கடலில் சூறாவளி சுழற்சி நிலவுவதாகவும் அடுத்த 4, 5 நாட்களில் வடக்கு நோக்கி நகரும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனால் கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா, கடலோர கர்நாடகா, கடலோர ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments