திடீரென இடிந்து விழுந்த அரசுப் பள்ளியின் மேற்கூரை.. வாசலை நோக்கி ஓடிய மாணவிகள்

0 1539
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 20 மாணவிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 20 மாணவிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

இப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவிகளுக்கான வகுப்பறையில் சுமார் 20 மாணவிகளுக்கு வகுப்பு நடந்து கொண்டிருந்தது . அப்போது  மாணவிகள் மீது பள்ளியின் மேற்கூரை துகள்கள் துண்டு துண்டாக விழுந்ததை அடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து வாசலை நோக்கி ஓடினர்.

சில நிமிடங்களுக்குள் அந்த வகுப்பறையின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் மேஜையின் மேல் விழுந்தது.  இந்நிலையில் இந்த பள்ளியில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டுமென கல்வி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments