ஆப்கான் அரசை சீர்குலைக்க எண்ண வேண்டாம்.. அமெரிக்காவுக்கு தலிபான்கள் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை சீர்குலைக்க எண்ண வேண்டாம் என்று தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தாக்கி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை சீர்குலைக்க எண்ண வேண்டாம் என்று தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தாக்கி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கத்தார் தலைநகரான தோஹாவில் முதன் முறையாக நேற்று அமெரிக்க அதிகாரிகளுக்கும் தலிபான்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆப்கானில் தற்போதுள்ள ஆட்சியை சீர்குலைக்க நினைத்தால் அனைவருக்கும் பிரச்சினைதான் என்று தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தாக்கி தெரிவித்தார்.
கோவிட் நோய்க்கு எதிராக ஆப்கான் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இரண்டாவது நாளாக இன்றும் தோஹாவில் அமெரிக்காவுடன் தாலிபன்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
Comments