தமிழ்நாடு முழுவதும் இன்று 5வது மெகா தடுப்பூசி முகாம்..

0 1695
இன்று தமிழகம் முழுவதும் 5வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தமிழகம் முழுவதும் 5ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்  நடைபெற்று வருகிறது. முற்பகல் 11.45 மணி நிலவரப்படி, 6.21 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.. 

தமிழகத்தில் ஏற்கனவே 4 முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட நிலையில், இன்று 5வது முறையாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் 32,017 இடங்களில் கொரொனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், மெகா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.

சென்னை முழுவதும் 200 வார்டுகளில், ஆயிரத்து 600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ள மாவட்டங்களில், அதனை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில், திருவேற்காடு, காட்டுப்பாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தடுப்பூசி முகாம்களில் தலைமை செயலர் இறையன்பு ஆய்வு நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments