தீவிரம் அடையும் போதைப் பொருள் விவகாரம்.. தயாரிப்பாளர் வீட்டில் அதிரடி சோதனை

0 2616
மும்பை சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பார்ட்டி நடத்திய விவகாரத்தில், படத் தயாரிப்பாளரான தொழிலதிபர் இம்தியாஸ் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

மும்பை சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பார்ட்டி நடத்திய விவகாரத்தில், படத் தயாரிப்பாளரான தொழிலதிபர் இம்தியாஸ் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சொகுசுக் கப்பலில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யனுடன் கைது செய்யப்பட்ட அச்சித் கான் என்பவர் அளித்த வாக்கு மூலத்தையடுத்து பாந்த்ராவில் உள்ள இம்தியாஸ் வீட்டில் பல மணிநேரம் சோதனை மற்றும் அவரிடம் விசாரணை நடைபெற்றது.

இன்றும் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மும்பையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரிய நாட்டவர் ஒருவரை போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.அவரிடமிருந்து 130 கிராம் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments