வயதானவர்களை குறி வைத்து பணம், நகை பறித்து வந்த ரவுடி.. காரிலும், ஹெலிகாப்டரிலும் திருடனை விரட்டிச் சென்று பிடித்த போலீசார்..

0 1881
இங்கிலாந்தில் வயதான பெண்களிடம் பணம் பறித்துவிட்டு காரில் அதிவேகமாக தப்பிச் சென்ற ரவுடியை போலீசார் நீண்ட தூரம் விரட்டிச் சென்று கைது செய்த வீடியோ வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தில் வயதான பெண்களிடம் பணம் பறித்துவிட்டு காரில் அதிவேகமாக தப்பிச் சென்ற ரவுடியை போலீசார் நீண்ட தூரம் விரட்டிச் சென்று கைது செய்த வீடியோ வெளியாகி உள்ளது.

பர்மிங்ஹாம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் காஹில் என்பவன் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. வயதானவர்களை குறி வைத்து அவன் கைவரிசை காட்டி வந்துள்ளார்.

கார் திருட்டு உள்ளிட்ட பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தேடப்பட்டு வந்த அவன் காரில் அதிவேகமாக தப்பிச் செல்வது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் கண்காணித்தபடியே காரில் தாமசை போலீசார் விரட்டிச் சென்றனர்.

நீண்ட நேரமாகவும், நீண்ட தூரமாகவும் விரட்டிச் சென்று தாமஸ் காஹிலை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments